×

வலங்கைமான் ஊராட்சி சாதாரண கூட்டம்

 

வலங்கைமான்,அக்.18: வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு சாதாரண கூட்டத்தில் நிர்வாக செலவினம் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வலங்கைமான் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் சங்கர் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணைத் தலைவர் வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி செந்தில் முன்னிலை வகித்தனர்.

தீர்மானங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலர் சிவக்குமார் வாசித்தார். ஒன்றிய குழு கூட்டத்தில் கடந்த 6ம் தேதி உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்த 15ஆவது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிர்வாக செலவினம் தொடர்பாக 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய குழு தலைவர் சங்கர் பேசுகையில்.

ஒவ்வொரு ஒன்றியக்குழு உறுப்பினர்களும் தங்களது பகுதியில் சுமார் 6 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக பணிகளை தேர்வு செய்து தெரிவிக்க கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரபாகரன், தாமரைச்செல்வம், ரேணுகா ரசூல் நஸ்ரின், காந்திமதி, விமலா, கவிதா, சீதாலட்சுமி, மாலதி உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நிறைவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் சிங்காரவேல் நன்றி கூறினார்.

The post வலங்கைமான் ஊராட்சி சாதாரண கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Valangaiman ,Valangaiman Union Committee ,Panchayat Union Office ,Union Committee ,Valangaiman Panchayat Ordinary Meeting ,Dinakaran ,
× RELATED வலங்கைமான் அருகே பழுதடைந்த பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும்