×

மூதாட்டியிடம் கம்மல் பறிப்பு

 

சிங்கம்புணரி, அக்.14: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஒருவன்பட்டி முட்டாக்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையா மனைவி சரசு(50). இவர், அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். வீட்டில் இரண்டு கதவுகளையும் திறந்து அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் உள்ளே வந்துள்ளனர். அவர்கள் சரசு அணிந்திருந்த ஒரு பவுன் தங்கத்தோடுவை அறுத்து எடுத்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து சிங்கம்புணரி போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் காயமடைந்த சரசு சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூதாட்டியிடம் தோடுகளை எடுத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post மூதாட்டியிடம் கம்மல் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Singambunari ,Sinnaia ,Sarasu ,Oravunpati Muttakati ,Singambunari, Sivaganga District ,Kammal ,
× RELATED 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்