×

கம்பம் நகராட்சி சார்பில் தெருக்கூத்து தூய்மை விழிப்புணர்வு

கம்பம் : தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி சார்பில், தூய்மை இந்தியா இயக்கத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, தூய்மையே சேவை என்ற தலைப்பில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

வருகிற அக்.2ம் தேதி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.ஏற்கனவே 3 கட்டமாக நம்ம நகராட்சி சார்பில் தூய்மை குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் தூய்மைப் பணிகள் நடந்து வருகிறது. தற்போது 4ம் கட்டமாக பார்க் ரோட்டில் தெருக்கூத்து நாடகம் மூலம் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை வகித்தார்.

நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், நகர் மன்ற உறுப்பினர்கள் சர்புதீன்,விருமாண்டி, சாதிக் அலி, முருகன், விஜயலட்சுமி, அன்புகுமாரி ஜெகன் பிரதாப், சகிதா பானு, அபிராமி, சுமதி, லதா ராதாகிருஷ்ணன், சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், பால்பாண்டி, நகராட்சி தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post கம்பம் நகராட்சி சார்பில் தெருக்கூத்து தூய்மை விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Kampam Municipality ,Kampam ,Swachh India Movement ,Swachh Ye Seva ,Theni District ,Gambam Municipality ,Dinakaran ,
× RELATED கம்பத்தில் டூவீலர் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் பலி