×

சென்னையில் போர் விமானங்களின் ஒத்திகை

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 6ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 6ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை சாகச நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நவீன ரபேல், சூரியகிரண் போர் விமானங்கள் உள்ளிட்ட 72 போர் விமானங்கள் சாகசங்களை செய்ய உள்ளன. விமானப்படையின் ஹெலிகாப்டர்களும் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றன. இந்த நிகழ்ச்சியை சாதனையாக்குவதற்காக லிம்கா புக் ஆப் ரெக்கார்டில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சிகள் அக்டோபர் 1 முதல் 2ம் தேதி வரை நடக்கிறது. ேநற்றே ஒரு விமானப்படை விமானம் பயிற்சியில் ஈடுபட்டதை மெரினாவில் கண்டு ரசித்தனர்.

அதுபோல, பயிற்சியையும் மக்கள் கண்டுகளிக்கலாம். அக்டோபர் 4ம் தேதி இறுதி பயிற்சி நடைபெற உள்ளது. இதுவும் 6ம் தேதி நடைபெறும் சாகச நிகழ்ச்சியை போலவே இருக்கும். இந்த நிகழ்ச்சியை பார்க்க சுமார் 15 லட்சம் பேர் மெரினாவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அனைவரும் இந்திய விமானப் படை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய விமானப்படையின் திறமையை உலகுக்கு அறிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த சாகச நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக விமான படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

The post சென்னையில் போர் விமானங்களின் ஒத்திகை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Indian Air Force Day ,Chennai Marina ,
× RELATED மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ...