×

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

மங்களூரு : கர்நாடக மாநிலம் மங்களூருவின் புறநகர் கிண்ணிகோலி பகுதியை சேர்ந்தவர் ஜெயராம். இவர் ஏராளமான பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலையில், அவருக்கு சொந்தமான பசு ஒன்று இரண்டு தலை கொண்ட கன்றுக்குட்டியை ஈன்றது. இரண்டு தனித்தனி தலைகள், நான்கு கண்கள் மற்றும் அசாதாரணமான உடல் அமைப்புடன் ஒரு உடலைக் கொண்டுள்ளது.

இரண்டு கண்கள் செயல்படவில்லை, மற்ற இரண்டு இயல்பானவை. அதன் தனித்துவமான நிலை காரணமாக, கன்று நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாட்டில் மூலம் உணவளிக்கப்பட்டுவருகிறது. இந்த தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டியை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

The post மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி appeared first on Dinakaran.

Tags : Mangalore ,Jayaram ,Kinnigoli ,Karnataka ,
× RELATED விமர்சனம்