- தேர்தல் பத்திரம் ஊழல்
- ஐனா சபாய்
- மோடி
- பெரம்பலூர்
- பாராளுமன்ற மக்களவைத் தொகுதி
- வேட்பாளர்
- கே.என்
- அருண் நெரு
- திமுகா
- துணை பொதுச்செயலாளர்
- மத்திய அமைச்சர்
- ராசா
- காந்தி சிலை
- ஐனா சபாயே
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேருவை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.ராசா பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை அருகில் நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: மணிப்பூரில் 2 மலை ஜாதி கிறிஸ்தவ பெண்களை நிர்வாணப்படுத்தி போலீசார் முன்னிலையில் பலாத்காரம் நடந்த சம்பவம் பாஜ அரசால் கண்டிக்கப்படவில்லை. அவர்களை அனுமதிக்கிற மோடிக்கும், அமித்ஷாவுக்கும் என்ன பெயர் வைக்கலாம் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 2ஜி வழக்கில் 14 நாள் சிபிஐக்கு முன் நேருக்கு நேர் வாதாடி வெற்றி பெற்றவன் நான். ஆனால் மோடி ₹6000 கோடிக்கு தேர்தல் பத்திர ஊழல் செய்துள்ளார் என அறிக்கை சொல்கிறது.
இப்படி உலகமே பார்த்து சிரிக்கிற, ஐநா சபையே பார்த்து சிரிக்கிற மோடி ஆட்சி நீடித்தால் இந்திய அரசியலமைப்பு சட்டம் இருக்காது. எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த 40க்கு 40 நாம் வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post ரூ.6000 கோடிக்கு தேர்தல் பத்திர ஊழல்: மோடியை பார்த்து ஐநா சபையே சிரிக்குதுங்க… appeared first on Dinakaran.