- விடியல் கறி விருந்து
- இராசிபுரம்
- கள்ளவாகி கருப்பனார் கோவில்
- முப்புசாய்
- நாமக்கல்
- நாமகிரிப்பேட்டை
- கலாவாஹி கருப்பண்ணன் கோவில்
- ஆர்.புதுப்பட்டி
- கலாலாவஹி கருப்பணர்
- கோவில்
- முப்புசை திருவிழா
நாமக்கல்: ராசிபுரம் அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் 15,000 பேருக்கு விடிய விடிய சுடசுட சமபந்தி கறி விருந்து பரிமாறப்பட்டது. நாமகிரி பேட்டையில் ஆர்.புதுப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பண்ணன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வாரம் ஞாயிறுக்கிழமை அன்று முப்பூசை விழா நடைபெறுவது வழக்கம். விழாவையொட்டி நேற்று இரவு சிறப்பு பூஜை நடைபெற்றன. முதலில் பூசாரிகள் பொங்கல் வைத்து பூஜை செய்தனர். அதன் பிறகு கோயில் முன்பு ஆடு, பன்றி, கோழி ஆகியவை பலியிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பச்சரிசி, கோழி, ஆடு, பன்றிகளை கொண்டுவந்து சுவாமிக்கு காணிக்கை செலுத்தினர். இதையடுத்து 1000 கிலோ ஆட்டுக்கறி, 1400 கிலோ பன்றிக்கறி, 100 கிலோ கோழிக்கறி என 2,500கிலோ கறி சமைக்கப்பட்டது. மிகபெரிய பாத்திரங்களில் தயாரான மெகா விருந்து விடிய விடிய பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் உள்ளூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 15000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு பாக்குமரத்தட்டில் அசைவ உணவு வழங்கப்பட்டது. வளர்ச்சியின்றி மக்கள் விவசாயத்தில் செழித்து வாழ கடந்த 100 ஆண்டுகளாக இந்த சமபந்தி கறி விருந்து விழா நடைபெற்று வருவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
The post ராசிபுரம் கள்ளவழி கருப்பனார் கோயிலில் விடியவிடிய கறி விருந்து: விவசாயம் செழிக்க 100 ஆண்டுகளாக நடைபெறும் முப்பூசைத் திருவிழா appeared first on Dinakaran.