×

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் உதவி கலெக்டர் அதிரடி

தக்கலை,செப்.29: தக்கலை பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பத்மநாபபுரம் நகராட்சி பகுதியில் உதவி கலெக்டர் ரஜத் பீட்டன், தலைமையில் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றதா என திடீர் ஆய்வு செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட நெகிழி மற்றும் பிளாஸ்டிக் பூச்சு கொண்ட தட்டுகள் 55 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் ₹35000 விதிக்கப்பட்டது. ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் லெனின் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் உதவி கலெக்டர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Thakkalai ,Padmanabhapuram ,Municipal ,Assistant Collector ,Rajat ,Dinakaran ,
× RELATED தக்கலை பெண்கள் சிறைச்சாலை நூலகத்துக்கு புத்தகங்கள்