கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் கடந்த 1867 ஆம் ஆண்டு சத்திய தர்மசாலையை நிறுவி அணையா அடுப்பை ஏற்றி வைத்தார் அன்று வள்ளலார் ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்றுவரை நிற்காமல் எரிந்து கொண்டு வருகிறது இந்த அணையா அடுப்பு மூலம் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இரவு பகலாக தொடர்ந்து அன்னதானங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி வடலூரில் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் இதனை காண்பதற்காக தற்பொழுது பக்தர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர். அந்த வகையில் ஜெர்மன் நாட்டிலிருந்து வந்த வள்ளலாரை பின்பற்றும் பக்தர்கள் குழுவினர் வள்ளலார் எடுத்துரைத்த ஜீவகாருண்ய ஒழுக்கம் என்று கூறப்படும் அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்ற என்ற உணர்வால் ஈர்க்கப்பட்ட ஜெர்மன் நாட்டு பயணிகள் அன்னதானம் வழங்குவதற்காக அரிசி மூட்டைகளை ஜெர்மன் நாட்டு பயணிகள் தங்கள் தோளில் சுமந்து வந்து கோவில் நிர்வாகத்திடம் அரிசி மூட்டைகளை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் வள்ளலார் அன்று அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்று கூறியது கடல் கடந்து சென்று ஜெர்மன் நாட்டு பயணிகளை அன்னதான உணர்வில் ஈர்த்து அரிசி மூட்டைகளை சுமந்து வந்து வழங்கியது நெகிழ்ச்சி ஊட்டும் வகையில் உள்ளதாக வள்ளலார் பின்பற்றாளர்கள் தெரிவிக்கின்றனர்
