- உலக மகளிர் உச்சி மாநாடு
- முதல் அமைச்சர்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வேலைவாய்ப்பு மற்றும்
- சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை
- தமிழ்நாடு அரசு
- சென்னை வணிக மையம்
- நந்தம்பாக்கம், சென்னை…
சென்னை: சென்னை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் சார்பில் நடைபெற்ற இரண்டு நாள் உலக மகளிர் உச்சி மாநாடு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: மகளிர் முன்னேற்றத்தில் மிக, மிக முற்போக்கான ஒரு மாநிலம் தமிழ்நாடு. இந்த மாற்றத்தை, இந்த முன்னேற்றத்தை உருவாக்கியது திராவிட தலைவர்கள், திராவிட இயக்கம், திராவிட மாடல் அரசு. கலைஞர் வழியில், இந்த காலத்திற்கு ஏற்றார் போல் முதல்வர் பெண்களுடைய முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆட்சி பொறுப்பேற்று முதல்வர் போட்ட முதல் கையெழுத்து பெண்களுக்கான விடியல் பயணம் திட்டம். இன்றைக்கு ஒவ்வொரு மகளிரும் அந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு மாதமும் குறைந்தது 800 ரூபாயிலிருந்து 900 ரூபாய் வரை மாதம், மாதம் சேமித்துள்ளார்கள்.
வயதான பெண்களுக்கு தாயுமானவர் திட்டம், ரேஷன் பொருட்களை ரேஷன் கடைக்கு வந்து வாங்கவேண்டாம். உங்கள் வீட்டுக்கே வந்து ரேஷன் பொருட்களை கொடுக்கின்றோம் என்று தாயுமானவர் திட்டம், அன்புச்சோலை திட்டம், அன்புக்கரங்கள் திட்டம் என்று பல்வேறு திட்டங்களை முதல்வர் பெண்களுக்கு என்றே உருவாக்கியிருக்கிறார். இப்படி, குழந்தைகள் முதல் எல்லா வயதில் உள்ள மகளிருக்கும் அரசு பல்வேறு திட்டங்களை அளித்து வருகிறது. தமிழ்நாட்டு மகளிருடைய வளர்ச்சியை, அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு இந்த Tamil Nadu We Safe திட்டம் நிச்சயம் துணை நிற்கும் என்று நம்புகின்றோம். திராவிட மாடல் அரசு, முதல்வர் மகளிர் முன்னேற்றத்திற்காக என்றைக்கும் துணை நிற்பார். எனவே, மகளிர் நீங்கள் முதல்வருக்கு என்றைக்கும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
