×

ராயபுரம், தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து 140 வழித்தடங்களில் 861 பஸ்கள் இயக்கம்: எம்டிசி அதிகாரிகள் தகவல்

 

தண்டையார்பேட்டை, ஜன.28: ராயபுரம், தீவுத்திடல் ஆகிய 2 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து தினசரி 140 வழித்தடங்களில் 861 பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிராட்வே பேருந்து நிலையத்தில் ரூ.822.70 கோடியில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், பிராட்வே பேருந்து நிலையம் மூடப்பட்டு, ராயபுரம், தீவுத்திடல் ஆகிய பகுதிகளில் 2 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி காலை 4.30 மணிக்கு பேருந்து சேவை தொடங்குகிறது. இங்கிருந்து 67 வழித்தடங்களில் 335 பஸ்களும், தீவுத்திடவில் இருந்து 73 வழித்தடங்களில் 526 பஸ்களும் என மொத்தம் 140 வழித்தடங்களில் 861 பஸ்கள் தினசரி இயக்கப்படுகின்றன.

* ராயபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம்: 11, 21, 26, 52, 54, 60, 10இ, 11ஜி, 11எம், 155ஏ, 17இ, 17கே, 188சி, 188இ.டி., 18ஏ, 18ஏ சியுடி, 18பி, 18டி, 18இ, 18கே, 18பி, 18ஆர், 18ஆர் எக்ஸ், 18எக்ஸ், 21சி, 26பி, 26ஜி, 26கே, 26எம், 26ஆர், 51டி, 51ஜெ, 52பி, 52ஜி, 52கே, 54ஜி, 54எல், 5சி, 60ஏ, 60டி, 60ஜி, 60எச், 88சி, 88கே, 88கே இ.டி., 9எம் இ.டி., ஏ51, டி51 இ.டி., இ18, இ51, எம்51ஆர்.
* ஈ.வேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 101சிடி, 101எக்ஸ், 53இ, 53பி, 71டி, 71இ, 71எச், 71வி, 120, 120சிடி, 120எப், 120ஜி, 120கே, 150.
* அண்ணாசாலை மற்றும் ஈவெரா சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து ராயபுரம் நோக்கி செல்லும் போது ஏற்கனவே அமைந்துள்ள நர்ஸ் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்திலும், வடக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள உயர் நீதிமன்றம் பேருந்து நிறுத்ததிலும் நின்று பயணிகளை இறக்கி, ராஜாஜி சாலை வழியாக ராயபுரம் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.

* ராயபுரம் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து ஈ.வே.ரா சாலை மற்றும் அண்ணாசாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பாரிஸ் கார்னர் சிக்னல், வடக்கு கடற்கரை சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள உயர் நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.
* கடற்கரை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது பாரீஸ் கார்னர் சிக்னல், வடக்கு கடற்கரை சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள உயர் நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

* மண்ணடி சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது எஸ்பிளனேடு சாலையின் வலதுபுறம் சென்று முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.
* ஈ.வெ.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது, ஏற்கனவே அமைந்துள்ள நர்ஸ் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி வலதுபுறம் திரும்பி முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

* காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து பாரிஸ் கார்னர் சிக்னல் இடதுபுறம் திரும்பி ஏற்கனவே அமைந்துள்ள பாரிஸ் கார்னர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி என்.எஸ்.சி.போஸ் சாலை, எஸ்பிளனேடு சாலை வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.
* தீவுத்திடலில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக சென்று இடதுபுறம் திரும்பி எஸ்பிளனேடு சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள ரங்கவிலாஸ் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.

* ஈ.வெ.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக வலதுபுறம் திரும்பி ஏற்கனவே அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.
* காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம், எஸ்பிளனேடு சாலையில் வலதுபுறம் திரும்பி என்.எஸ்.சி.போஸ் சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள டேர் ஹவுஸ் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி மீண்டும் பாரிஸ் கார்னர் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படுகிறது, என எம்டிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழித்தடங்கள்
* தீவுத்திடலில் இருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம்: 6, 13, 60இ, 102, 109, 102சி, 102கே, 102பி, 102எஸ், 102எக்ஸ், 109ஏ, 109எக்ஸ், 21ஜி, 21எல், 21இ இ.டி.
* கடற்கரை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள்: 1, 4, 44, 330, 33எல், 38ஏ, 38ஜி, 38எச், 44சி, 44சிடி, 4எம், 560, 56டி இ.டி., 56ஜெ, 56கே, 56பி, 570, 57எப், 57எச், 57ஜெ, 57எம், 8பி, சி56சி, சி56சி இ.டி., 557ஏ இ.டி.,
* மண்ணடி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 33பி, 56சி, 56எப்.
* ஈ.வேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 15, 20, 155, 156, 17டி, 20ஏ, 20டி, 50இ.டி., 50எம்.
* வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள்: 35, 42, 242, 1428, 142பி, 35சி, 428, 420, 42டி, 42எம், 640, 64கே, 64கே இ.டி., 7இ, 7எச், 7கே, 7எம், 7எம் இ.டி.

முதல்வர் நாளை அடிக்கல்
பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து முனையம் அமைப்பதற்கு ரூ.822.70 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதற்கான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

Tags : Raipuram ,MTC ,Dandaiyarpettai ,Diwatidal ,Municipal Transport Department ,BROADWAY ,BUS STATION ,
× RELATED 51,000 அடி உயரத்தில் பறக்கும் திறன்...