டெல்லி: உலகின் 3 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் கூட்டம் தொடங்கியது. குடியரசுத் தலைவர் தனது உரையை துவங்கியதும் எதிர்க்கட்சிகளின் முழக்கமிட்டனர். 100 நாள் வேலை திட்டத்தை மாற்றியதை கண்டித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கு இடையே பேசிய அவர்; கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.
நாடு வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி செல்வதற்கான வலிமையை நமக்கு அளித்துள்ளது. கடந்த 10, 11 ஆண்டுகளில் ஒன்றிய அரசு பல்வேறு துறைகளில் புதிய முத்திரை பதித்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதால் மக்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு குறைந்துள்ளது. உலகின் 3 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. உலகளவில் பொருளாதார சிக்கல் இருந்தாலும் இந்தியாவில் பொருளாதாரம் வலுவாக உள்ளது. இந்தியாவில் உள்ள கிராமங்கள் நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய பாம்பன் பாலம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவில் அரிசி உற்பத்தி நடைபெறுகிறது. கடந்த ஆண்டில் 150 மில்லியன் டன் அரிசி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 350 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. உலகின் 3 வது பெரிய மெட்ரோ சேவை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. அசாமில் செமி கண்டக்டர் ஆலை பணிகள் தீவிரமாக நடக்கின்றன. அருணாச்சல், திரிபுரா, மிசோரம் மாநில தலைநகரங்கள் அகல ரயில் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
செல்போன் உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. உலகின் 3 வது பெரிய மெட்ரோ சேவை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. அனைத்து துறைகளிலும் இந்தியாவின் வேகமான வளர்ச்சி தற்போது உலகளவில் பேசுபொருளாக உள்ளது. தற்போது, எல்லோருக்கும் எல்லாம் என்ற திட்டத்தின் கீழ், அனைத்து நகரங்களுக்கும் வளர்ச்சி பரவலாக்கப்பட்டிருக்கிறது. திருவள்ளுவர் கூறுவது போல், எந்த தொழில் செய்பவராக இருந்தாலும், விவசாயத்தை சார்ந்து தான் இருக்க வேண்டும் என்று கூறினார்.
