×

ரயிலை கவிழ்க்க சதி?.. பஞ்சாப் தண்டவாளத்தில் மர்மபொருள் வெடிப்பு; தீவிர விசாரணை

 

பஞ்சாப்: ஃபதேஹர் சாஹிப் மாவட்டத்தில் தண்டவாளத்தில் மர்மபொருள் வெடித்து ரயில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். மர்மபொருள் வெடித்து 12 அடி நீளத்துக்கு தண்டவாளம் சேதம் அடைந்துள்ள நிலையில் சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தண்டவாளத்தில் இருந்த மர்மபொருள் வெடித்ததில் சரக்கு ரயில் என்ஜினின் முன்பகுதியில் சிறிய அளவில் சேதம் அடைந்துள்ளது. அமிர்தசரஸ் – டெல்லி வழித்தடத்தில் மர்மபொருள் வெடித்த நிலையில் ரயிலை கவிழ்க்க சதியா என விசாரணை நடைபெற்று வருகிறது. மர்மபொருள் வெடித்த நிலையில் அதில் இருந்த ரசாயன மாதிரியை சேகரித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

Tags : Punjab ,Fatehar Sahib district ,
× RELATED ஏர்இந்தியாவின் பன்னாட்டு...