×

உத்தர பிரதேசத்தில் வைரலாகும் வீடியோ: குடிகார கணவனை கட்டிலில் கட்டிப்போட்ட அடாவடி மனைவி: துப்பாக்கி மருமகள் மீது மாமியார் புகார்

அலிகார்: உத்தர பிரதேசத்தில் மதுபோதையில் இருந்த கணவனை மனைவி கட்டிலில் கட்டிப்போட்ட நிலையில், மருமகள் துப்பாக்கி வைத்திருப்பதாக மாமியார் புகார் அளித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் அலிகார் அருகே உள்ள ஹமித்பூர் கிராமத்தில் வசிக்கும் பிரதீப் என்பவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி சோனி, கணவனை கயிற்றால் கட்டிலில் கட்டி வைத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரதீப்பின் தாயார் மற்றும் கிராம மக்கள் அவரை மீட்டனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பிரதீப்பின் தாயார் டப்பால், காவல் நிலையத்தில் புகைப்படம் ஒன்றைக் காட்டி புகார் அளித்துள்ளார். அதில் சோனி கையில் நாட்டு துப்பாக்கி போன்ற ஆயுதத்தை வைத்திருப்பது பதிவாகியுள்ளது.

‘கடந்த 2 ஆண்டுகளாக இந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு எனது மகனை கொன்றுவிடுவேன் என்று மருமகள் மிரட்டி வருகிறார்’ என்று மாமியார் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், வைரலாகும் வீடியோ மற்றும் துப்பாக்கி புகைப்படம் ஆகியவற்றின் உண்மைத்தன்மை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Uttar Pradesh ,Aligarh ,Pradeep ,Hamitpur ,Aligarh, Uttar Pradesh ,
× RELATED காதலரின் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து;...