×

சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி

பாலக்காடு : கேரள மாநிலம் கோட்டயம் அடுத்துள்ளது எ.சி. சாலை. இங்குள்ள மோனிப்பள்ளியை சேர்ந்தவர் சுரேஷ் (52). இவரின் மனைவி அம்பிளி (48). இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் கொல்லத்தைச் சேர்ந்த சுரஜ், அவரது மனைவி சுகி, இத்தம்பதியின் மகன்கள் அர்ஜித் (5), கோகுல் இவர்கள் 6 பேரும் காரில ஆலுவா திருவைராணிக்குளம் சிவன் கோயிலுக்கு சென்றனர். தரிசனம் முடித்து நேற்று முன்தினம் கோட்டயம் நோக்கி புறப்பட்டனர்.

கூத்தாட்டுக்குளம் பகுதியை நோக்கி வந்தபோது காரும், கேரள அரசு பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதியது.இந்த விபத்தில் சுரேஷ், அவரின் மனைவி அம்பிளி, நண்பரின் மகன் அர்ஜித் ஆகியோர் பலியானார்கள்.

சுரஜ், அவரது மனைவி சுகி, இளைய மகன் கோகுல் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து குருவிலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார், மினி லாரி மோதி 3 வாலிபர்கள் பலி

கோழிக்கோடு மாவட்டம், தாமரச்சேரியில் இருந்து மலைப்பாதை வழியாக குணமங்கம் நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரியும், கோழிக்கோட்டில் இருந்து கொடுவள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த காரும் குந்தமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் நேருக்குநேர் மோதிக்கொண்டன.

இதில், காரில் பயணித்த கோழிக்கோடு புதுப்பாடியைச் சேர்ந்த சுபிக் (27), கொடுவள்ளி அடுத்த வாவாட்டைச் சேர்ந்த நிஹால் (27), மினி லாரி டிரைவர் வயநாடு மாவட்டம், மரக்கத்தொடியைச் சேர்ந்த ஷமீர் (33) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களை போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் மீட்டு, கோழிக்கோடு மாவட்ட மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காரில் பயணித்த ஷபீக் (43) என்பவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். கோழிக்கோடு மாநகராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sami ,Kerala State Kottayam ,A. C. Road ,Suresh ,Monipal School ,Ambili ,Suraj ,Kollam ,Suki ,Arjit ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...