×

உல்லாசமாக இருந்து விட்டு காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன்: ஏற்காடு காட்டேஜில் பயங்கரம்

சேலம்: ஏற்காடு தனியார் காட்டேஜிக்கு பேஸ்புக் காதலியை அழைத்து சென்று உல்லாசமாக இருந்து விட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காடு தனியார் பள்ளியின் பின்புறம் உள்ள தனியார் காட்டேஜில், ஒரு அறையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என நேற்றிரவு ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார், அந்த காட்டேஜிக்கு சென்று, குறிப்பிடப்பட்ட அந்த அறையை திறந்து பார்த்தனர். அங்கு, அரை நிர்வாண நிலையில் இளம்பெண் இறந்து கிடந்தார். அவரது சேலை தனியாக கிடந்தது.

நேற்று மதியம் வாலிபர் ஒருவருடன் அந்த இளம்பெண் வந்து, அறை எடுத்து தங்கியதாக காட்டேஜ் மேலாளர் போலீசில் தெரிவித்தார். உடனே அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இறந்து கிடந்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது போல் தெரிந்தது. அவரது சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கொலையான பெண், தர்மபுரி மாவட்டம் ஏரியூரை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி சாலா (30) எனத் தெரியவந்தது. கணவர் பிரிந்து சென்ற நிலையில், 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது கொண்ட மகன், 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

சாலாவிற்கு சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகேயுள்ள தப்பக்குட்டை பூசாரியூர் காட்டுவளவை சேர்ந்த பார்த்திபன் (30) என்பவருடன் பழகி, அவருடன் ஏற்காட்டிற்கு வந்து தங்கியது தெரியவந்தது. பார்த்திபன் தான், அவரை கொலை செய்து விட்டு தப்பியுள்ளார் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து சாலாவின் கள்ளக்காதலன் பார்த்திபனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடினர். அவரை இன்று காலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. எலக்ட்ரீசியன் வேலை பார்த்துவரும் பார்த்திபனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 7 வயதில் ஒரு மகன் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் மூலம் சாலாவுடன் பார்த்திபனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இருவரும் மெசேஜ் மட்டும் அனுப்பி வந்தநிலையில், பிறகு நேரில் பார்த்து நெருங்கி பழகியுள்ளனர். பல்வேறு இடங்களுக்கு வெளியில் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அவ்வப்போது பார்த்திபனிடம் சாலா பணம் வாங்கி வந்துள்ளார். இந்தவகையில், ரூ.7 லட்சம் வரை அவர் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை கடந்த சில மாதங்களாக பார்த்திபன் திரும்ப கேட்டு வந்துள்ளார். அதற்கு அவர் கொடுக்க மறுத்து வந்திருக்கிறார். இச்சூழலில் நேற்று காலை சாலாவை அழைத்துக்கொண்டு ஏற்காட்டிற்கு பார்த்திபன் வந்துள்ளார். அங்கு கடும் குளிரில் பல இடங்களை சுற்றி பார்த்துவிட்டு, தனியார் காட்டேஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அங்கு உல்லாசமாக இருந்துவிட்டு, கொடுத்த பணத்தை பார்த்திபன் திரும்ப கேட்டுள்ளார். அதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். அந்த தகராறில் சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து பார்த்திபன் தப்பியுள்ளார் என விசாரணையில் தெரியவந்தது. கைதான பார்த்திபனிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Yercaud ,Salem ,Facebook ,Yercaud, Salem district ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!