×

என் தலையில் எழுதியதை யாராலும் தடுக்க முடியாது: கேப்டன் சுப்மன் கில் விரக்தி

வடோதரா: இந்தியாவுக்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுலாப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் இன்று வடோதராவில் துவங்குகிறது. இதற்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் களமிறங்குகிறது. இவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார்.

டெஸ்ட், ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக செயல்படும் இவர் நீக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நேற்று பயிற்சிக்கு பின் சுப்மன் கில், நிருபர்களிடம் கூறியதாவது: டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டதில் பெரிய வருத்தம் ஏதுவுமில்லை. நான் எங்கு இருக்க வேண்டுமோ அங்குதான் இருக்கிறேன். என் தலையில் எழுதப்பட்டதை, யாராலும் தடுக்கவோ, மாற்றவோ முடியாது.

ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணிக்கு என்ன செய்ய முடியுமோ, அதை கட்டாயம் வெளிப்படுத்துவேன். தேர்வுக்குழுவினர் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, இந்திய அணிக்கு எது நன்மையோ, அதனை எடுத்திருக்கிறார்கள். அவர்களின் முடிவை மதிக்கிறேன். நிச்சயமாக மீண்டு வருவேன். டி20 அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என நம்புகிறேன். இவ்வாறு கூறினார்.

Tags : Shubman Gill ,Vadodara ,New Zealand cricket ,India ,T20 World Cup… ,
× RELATED முதலாவது ஒருநாள் போட்டியில்...