×

மலேசிய ஓபன் பேட்மிண்டன் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் யமாகுச்சி உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பிவி சிந்து 21-11 என என முதல் சுற்றை கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தின் போது யமாகுச்சிக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியிலிருந்து விலகியதால் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து, சீனாவின் வாங் ஜியியை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் வாங் ஜி யி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 16-21,15-21 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

Tags : Malaysia Open badminton ,PV Sindhu ,Kuala Lumpur ,India ,Malaysia Open International Badminton Tournament ,Japan ,Yamaguchi… ,
× RELATED டி20 உலகக் கோப்பை அயர்லாந்து அணி அறிவிப்பு