- சபலெங்கா
- மார்த்தா
- பிரிஸ்பேன்
- மெட்வெடேவ்
- நகஷிமா
- உக்ரைன்
- மார்டா கோஸ்ட்யுக்
- பிரிஸ்பேன் சர்வதேச
- பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா
பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பைனலுக்கு நம்பர்-1 வீராங்கனை சபலென்காவுடன் உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக் மோதுகிறார். ஆடவர் இறுதி போட்டிக்கு மெத்வதேவ்-நகஷிமா தகுதி பெற்றனர். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில், நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரீனா சபலென்கா, தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள செக்குடியரசின் கரோலினா முச்சோவாவுடன் மோதினார். 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அரீனா சபலென்கா வெற்றி பெற்று பைனலில் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் 16ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக், 4ம் ரேங்க் வீராங்கனையான ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.
இதில் 6-0, 6-3 என்ற செட் கணக்கில் மார்டா கோஸ்ட்யுக் வெற்றி பெற்று பைனலுக்கு சென்றார். இன்று காலை நடைபெறும் பைனலில் சபலென்கா-மார்டா கோஸ்ட்யுக் மோதுகின்றனர். ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமா 7(7)-6(4), 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் கோவாசெவிக்கை வீழ்த்தி, இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ், அமெரிக்க வீரர் மிச்செல்சனை எதிர்த்து ஆடினார். 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவ் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இன்று நடக்கும் இறுதி போட்டியில் மெத்வதேவ்-நகஷிமா மோதுகின்றனர்.
