×

கள்ளக்காதலியின் ஆபாச படங்களை வெளியிட்டவர் அதிரடி கைது

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கூறைநாடு எடத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(45). எலக்ட்ரிஷியன். இவருக்கு 38 வயதான திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அந்த பெண் மணிகண்டனுடன், பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் கோபமடைந்த மணிகண்டன் தன்னிடம் பேசாவிட்டால், தன்னுடன் நெருக்கமாக உள்ள ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என கூறி மிரட்டி உள்ளார்.

அதில் ஒரு சில படங்களை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மணிகண்டனுக்கு மனைவி, குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Mayiladuthura ,Manikandan ,
× RELATED உல்லாசத்திற்கு மறுத்ததால்...