- அக்கா
- கோலந்தியா
- தர்மபுரி
- நல்லம்பில்லி
- கோலாண்டியல
- பிரபு
- ஒசாலிபுத்தூர்
- தர்மபுரி மாவட்டம்
- இந்தூர்
- ராஜேஸ்வரி
நல்லம்பள்ளி: கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரமடைந்து, கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிரோடு புதைத்த அக்கா கணவரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த ஒசஅள்ளிபுதூரை சேர்ந்தவர் பிரபு (40). இவருக்கு ராஜேஸ்வரி (30) என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர். பிரபு பெங்களூருவில் தங்கி கட்டிட கான்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார். ராஜேஸ்வரியின் அக்கா முனியம்மாளின் கணவர் அனுமந்தன் (40). பிரபுவும், அனுமந்தனும் பங்காளி முறை கொண்டவர்கள்.
இவர்களை சகோதரிகளான இருவரும் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில், ராஜேஸ்வரிக்கும், அனுமந்தனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்ததால், தகாத உறவை கைவிட்ட ராஜேஸ்வரி, அனுமந்தனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். அனுமந்தன் உல்லாசமாக இருக்க அழைத்தும் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அனுமந்தன் அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
இந்நிலையில், ராஜேஸ்வரி நேற்று மதியம், மகன் படிக்கும் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு சென்ற அனுமந்தன் இறுதியாக உன்னிடம் பேச வேண்டும் என அழைத்துள்ளார். இதனால், ராஜேஸ்வரி வீட்டிற்கு அருகில் உள்ள கல்லுகொல்லைமேடு என்ற இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த குழிக்குள் ராஜேஸ்வரியை தள்ளி விட்ட அனுமந்தன், அவரது தலை மீது கல்லை தூக்கி போட்டுள்ளார். இதனால், குழிக்குள் மயங்கிவர் மீது, தயார் நிலையில் டிராக்டரில் வைத்திருந்த கட்டிட கழிவு மண்ணை கொட்டி மூடி விட்டு, ஒன்றும் தெரியாததுபோல் அனுமந்தன் சென்று விட்டார்.
அருகில் விவசாய நிலத்தில் வேலை செய்தவர்களுக்கு, ஆணும், பெண்ணும் வாக்குவாதம் செய்த சத்தம் கேட்டுள்ளது. பிறகு சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, குழிக்குள் மண் கொட்டப் பட்டு இருந்ததை கண்டு இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து பொக்லைன் மூலம் குழியை தோண்டியபோது, ராஜேஸ்வரி சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிந்து ராஜேஸ்வரியை உயிரோடு புதைத்த அனுமந்தன், உடந்தையாக இருந்த ஜேசிபி ஆப்ரேட்டர் ஜெகன் (25) ஆகியோரை நேற்று மாலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
