×

வங்கதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய இந்து இளைஞர் கொலையில் முக்கிய குற்றவாளி கைது

டாக்கா:வங்கதேத்தில் இந்து தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக முன்னாள் மதரசா ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்தேசத்தில் மாணவர் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாதி கடந்த மாதம் 18ம் தேதி சுட்டு கொல்லப்பட்டார். உஸ்மான் கொலை செய்யப்பட்ட அதே நாளில் மைமன்சிங் மாவட்டத்தில் உள்ள பாலுகா என்ற இடத்தில் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ்(27) என்ற தொழிலாளியை ஒரு கும்பல் அடித்து உதைத்து உயிரோடு அவரை தீயிட்டு எரித்து கொன்றனர்.

இந்த வழக்கில் அடையாளம் தெரியாத 150 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தீபு சந்திர தாஸ் கொலையில் முக்கிய குற்றவாளியான யாசின் அராபத்தை போலீசார் கைது செய்துள்ளதாக வங்கதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 12 நாட்கள் தலைமறைவாக இருந்த யாசின் டெம்ரா காவல் நிலைய பகுதியில் உள்ள சாருலியாவில் கைது செய்யப்பட்டார். முன்னாள் மதரசா ஆசிரியரான யாசின், தீபுவை தாக்கிய கும்பலை வழிநடத்தியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* மேலும் ஒரு அரசியல் பிரமுகர் சுட்டுக்கொலை
வங்கதேச தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஷிசூர் ரகுமான் முஷாபிர் என்பவரை நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் சுட்டுக்கொன்றனர். டாக்கா கர்வான் பஜார் பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

* இந்தியாவில் விசா சேவையை நிறுத்தியது வங்கதேசம்
டெல்லி, கொல்கத்தா, அகர்தலாவில் விசா சேவையை நிறுத்த வங்கதேசம் உத்தரவிட்டு்ள்ளது. ஆனால் மும்பை மற்றும் சென்னையில் விசா சேவைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

Tags : Bangladesh ,Dhaka ,Sharif Usman Hadi ,Usman ,Mymensingh… ,
× RELATED நியூயார்க் மேயரை அவமதிக்கும் வகையில்...