வங்கதேசம்: பாகிஸ்தானிடம் JF-17 Thunder ரக போர் விமானங்களை வாங்குவது குறித்து வங்கதேசம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. போர் விமானங்கள் மட்டுமின்றி, Super Mushshak பயிற்சி விமானங்களை விரைவாக வழங்கவும், வங்கதேச விமானிகளுக்கு பயிற்சிகளை அளிக்கவும் பாகிஸ்தானிடம் கேட்டுள்ளது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குப் பிறகு அமைந்துள்ள இடைக்கால அரசு, பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது.
