×

738 கிலோ கஞ்சா தீ வைத்து அழிப்பு

நாமக்கல், ஜன.5: நாமக்கல் மாவட்டம் முழுவதும், மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலையங்கள் மூலம் நடத்தப்பட்ட சோதனையின்போது, 88 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதான குற்றவாளிகளிடமிருந்து 738 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றை நீதிமன்ற உத்தரவின்படி, போலீசார் தீவைத்து அழித்தனர். தமிழக காவல்துறை போதைப்பொருட்கள் ஒழிப்புக்குழு ஐ.ஜி, அனில்குமார் உத்தரவுப்படி, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் நேற்று எஸ்பி விமலா மேற்பார்வையில், 738 கிலோ கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டதாக நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Namakkal ,Prohibition Enforcement and Police Stations ,
× RELATED இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்