×

கொப்பரை விலை அதிகரிப்பு

சேந்தமங்கலம், ஜன. 5: சேந்தமங்கலம் வட்டாரத்தில் கொப்பரை விலை சற்று உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேந்தமங்கலம் வட்டாரத்தில், கொல்லிமலை அடிவார பகுதியான வாழவந்திகோம்பை, நடுக்கோம்பை, பொம்ம சமுத்திரம், பெரியபள்ளம்பாறை, சின்னப்பள்ளம்பாறை, காளப்பநாயக்கன்பட்டி, வெண்டாங்கி, பேளுக்குறிச்சி,மேலப்பட்டி, கல்குறிச்சி, வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர்.

கொல்லிமலை அடிவார பகுதி என்பதால், மிதமான தட்பவெப்ப சூழ்நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக இங்கு விலையும் தேங்காய் களி பருப்புகள் அடர்த்தியாகவும், எண்ணெய் பசை அதிக அளவில் உள்ளதால் வெளிமார்க்கெட்டுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இப்பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளை பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் குத்தகை எடுத்து கொப்பரையை விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

 

Tags : Senthamangalam ,Senthamangalam district ,Vazhavanthikombai ,Nadukombai ,Bommasamuthiram ,Periyapallambarai ,Chinnapallambarai ,Kalapanayakkanpatti ,Vendangi ,Pelukurichi ,Melapatti ,Kalkurichi ,Vettukkadu ,Kolli Hills ,Senthamangalam district… ,
× RELATED இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்