சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,00,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12,600க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.257க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 2,57,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.430 குறைத்து ஒரு சவரன் ரூ.1,00,160 க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.60 குறைந்து. ஒரு கிராம் ரூ.12.520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலையும் இன்று காலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.256-க்கும். ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை ரூ.60 குறைந்த நிலையில், மாலை ரூ.80 உயர்ந்து, ரூ.12.600-க்கு விற்பனையாகிறது. தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.40 உயர்ந்து. ரூ.1,00,800-கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.257-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.1.000 உயர்ந்து. ரூ.2,57,000 க்கு விற்பளை செய்யப்பட்டு வருகிறது. வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
