×

திராவிட மாடல் அரசின் லேப்டாப் திட்டம், கேம் சேஞ்சராக இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

 

சென்னை: திராவிட மாடல் அரசின் லேப்டாப் திட்டம், கேம் சேஞ்சராக இருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘உலகம் உங்கள் கையில்’ எனும் திட்டத்தில் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்; தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் இன்று மிக மிக முக்கியமான நாள். அறிவு மற்றும் அறிவியலை கொண்டாடும் இயக்கம் திராவிட இயக்கம். எதிர்காலத்தில் தூரத்தில் உள்ள மனிதர்கள் முகம் பார்த்து பேசிக்கொள்ளும் கருவி வரும்.

ஒரு இடத்தில் இருந்துகொண்டே பல இடங்களில் கல்வி கற்கும் சூழல் வரும் என சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு ‘இனி வரும் உலகம்’ என்ற உரையில் பெரியார் சொன்னார். அவர் அன்று சொன்னதெல்லாம் இன்று அறிவியல் கருவிகளாக நம் கையில் கிடைத்துள்ளன. பள்ளிகளில் கணினி படிப்பை அறிமுகம் செய்தவர் கலைஞர். தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு முன்னணி வகிப்பதற்கு அடித்தளமிட்டவர் கலைஞர். கல்வி வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.

ஸ்டாலின்திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களில் மடிக்கணினி திட்டமும் இணைந்துள்ளது. திராவிட மாடல் அரசின் லேப்டாப் திட்டம், கேம் சேஞ்சராக இருக்கும். கல்விதான் யாராலும் திருட முடியாத செல்வம்; மாணவர்களின் கையில் இலவசமாக திராவிட மாடல் அரசு மடிக்கணினியை கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள், உலகின் முன்னணி நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்க அரசு தரும் மடிக்கணினி உதவியாக இருக்கும் என்று கூறினார்.

Tags : Dravitha ,Deputy Principal Assistant Secretary ,Stalin ,Chennai ,Deputy Chief Executive Officer ,Udayaniti Stalin ,Chief Minister ,MLA ,K. Stalin ,
× RELATED பிரசார கூட்டத்தின் பாதுகாப்புக்கு...