×

பொங்கல் பண்டிகையை ஒட்டி தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே

 

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. நாகர்கோவில் – தாம்பரம் இடையே ஜன. 11, 18ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரம் – கன்னியாகுமரி இடையே ஜன.12, 19ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். கன்னியாகுமரி – தாம்பரம் – நாகர்கோயில் இடையே ஜன.13, 20 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக வரும் ஜனவரி 8 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நாளை (4 ஆம் தேதி) காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என அறிவித்துள்ளது.

நாட்டில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக, பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதனால், பண்டிகை நாட்களில் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில், ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வார்கள்.

இதனை கருத்தில் கொண்டு, பயணிகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 11ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06012) வருகிற 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06011) வருகிற 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) தாம்பரத்தில் இருந்து இரவு 3.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06156) வருகிற 09 மற்றும் 16 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06055) வருகிற 09 மற்றும் 16 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) செங்கல்பட்டில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலி வந்துசேரும்.

திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06158) வருகிற 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06057) வருகிற 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) செங்கல்பட்டில் இருந்து மதியம் 5 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலி வந்துசேரும்.

கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06034) வருகிற 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூரில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு. அடுத்த நாள் காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06033) வருகிற 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9 மணிக்கு கோயம்புத்தூர் வந்துசேரும்.

Tags : Southern Railway ,southern ,Pongal festival ,Chennai ,Nagarkovil ,Tambaram ,Kanyakumari ,
× RELATED அரசு ஊழியர், ஆசிரியர்களின் 20 ஆண்டு கால...