×

வெனிசுலா தலைநகர் கராகஸ் உட்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் குண்டுவீச்சு!

கராகஸ்: வெனிசுலா தலைநகர் கராகஸ், மிரண்டா, அராகுவா, லாகுவயிரா ஆகிய பல்வேறு பகுதிகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா தாக்கியதை உறுதிப்படுத்தியுள்ள வெனிசுலா அரசு, நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்தது. அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து வெனிசுலா தலைநகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல்களை தொடுத்த நிலையில், அந்நாட்டு அதிபர் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அவர்களை வெனிசுலாவை விட்டு நாடு கடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ், வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோ தெரிவித்தார். மதுரோ அமெரிக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் அவர் கூறினார்.

வெனிசுலா நாட்டின் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா, கியூபா, ஈரான் கண்டனம்..!!
வெனிசுலா நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை வெளிப்படையாக அமெரிக்கா மீறியுள்ளது. சர்வதேச சட்டங்களை மீறி வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது என அமெரிக்காவுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வெனிசுலா ஒருபோதும் சரணடையாது; அமெரிக்காவை எதிர்த்து தொடர்ந்து போராடும் என வெனுசுலா பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் வெனிசுலாவின் எண்ணெய் மற்றும் கனிமவளங்களை கைப்பற்ற அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக வெனிசுலா குற்றம்சாட்டியுள்ளது.

Tags : US ,Caracas ,CAPITAL ,MIRANDA ,ARAGUA ,LAGUAIRA ,Venezuelan government ,United States ,Venezuela ,
× RELATED தேர்தல் வெற்றிக்காக சாதி, மதங்களை...