- டிஎஸ்பி
- வந்தவாசி
- வந்தவாசி
- காவல் நிலையம்
- டெல்லர்
- தெற்கு
- வந்தவாசி
- வடக்கு
- பெண்கள் பொலிஸ் நிலையம்
- வால்கொடுங்கலூர்
- தேசூர்
- வடவனகம்பாடி
- பொன்னூர்
வந்தவாசி, ஜன.1: வந்தவாசி காவல் நிலையத்துக்கு உட்பட்ட தெள்ளார், வந்தவாசி தெற்கு, வந்தவாசி வடக்கு, மகளிர் காவல் நிலையம், கீழ்கொடுங்காலூர், தேசூர், வடவணக்கம்பாடி, பொன்னூர் ஆகிய 8 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் ஆகியோரின் துப்பாக்கிகள், ஹெல்மெட், ஸ்டார் பட்டன், கலவர தடுப்பு தட்டி உள்ளிட்ட தளவாட பொருட்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என நேற்று வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அந்தந்த காவல் நிலையங்கள் பணி புரியும் போலீசாரின் தளவாட பொருட்களை டிஎஸ்பி தீபக் ரஜினி ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் காவல் நிலையம் பராமரிப்பு, பதிவேடு பராமரிப்பு உள்ளிட்டவை சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றனவா? எனவும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது இன்ஸ்பெக்டர்கள் பாலு, மங்கையர்க்கரசி, வளர்மதி, சங்கர், ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, புஷ்பாகரன், தமிழ்ச்செல்வி, மீனாட்சி, சரவணன், பிரசாந்த் உள்ளிட்ட பலரும் இருந்தனர். வந்தவாசி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாரின் தளவாட பொருட்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றதா? என நேற்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் டிஎஸ்பி தீபக் ரஜினி ஆய்வு மேற்கொண்டார்.
