சென்னை: கடந்த 2014ம் ஆண்டு சென்னை தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.30,000 லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான, வருவாய் ஆய்வாளர் ஹரிஹரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறை தண்டனையுடன் ரூ.4000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
