சென்னை: காணும் பொங்கலை ஒட்டி மெரினா உள்ளிட்ட இடங்களில் குப்பைகளை கையாள எடுத்த நடவடிக்கை என்ன? என ஜனவரி 8க்குள் சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ‘பொது இடங்களில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மாசு கட்டுப்பாடு வாரியம், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து குப்பை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்’ என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
