சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,04,160க்கு விற்பனையாகிறது. இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. நேற்றைய முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,100க்கும், பவுனுக்கு ரூ.1680 உயர்ந்து ஒரு பவுன் ஒரு லட்சத்து ரூ. 4,800க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.13,020க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,04,160க்கு விற்பனையாகிறது.
அதே போல வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெள்ளி விலை நேற்றைய முன்தினம் ஒரு கிராம் ரூ.285க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இன்று வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.281க்கு விற்பனையாகிறது. வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.4 குறைந்துள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ஒரே நாளில் ரூ.4,000 குறைந்து ஒரு கிலோ ரூ. 2,81,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் தங்கம், வெள்ளி விலை அதிகரித்து கொண்டே இருந்த நிலையில், இன்று தங்கம், வெள்ளி விலை சரிந்தது நடுத்தர மற்றும் ஏழை மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.
