சென்னை: செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 11.174 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகள் 100% நீர் இருப்பை கொண்டுள்ளன.
