- கவர்னர்
- திருப்பதி எம்மலையன் கோயில்
- ஆர்.என்.ரவி
- சுவாமி தர்சன்
- திருமலை
- ஆர்எஸ்எஸ்
- மோகங்கவத்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சுவாமி
- மோகன் பகவத்
- திருப்பதி எருமாலயன் கோயில்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் மற்றும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் வரவேற்று சுவாமி தரிசனம் செய்து வைத்தனர்.
பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர். தொடர்ந்து கோயிலில் நடைபெறும் உற்சவங்கள் மற்றும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் இந்து தர்ம பிரசார பரிஷத் செயல்பாடுகள், மேம்பாட்டு பணிகள் ஆகியவை குறித்து மோகன் பகவத்திற்கு செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் விளக்கினார். இதையடுத்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசனம் செய்து வைத்து தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். கவர்னர் சுவாமி தரிசனத்தின்போது, தமிழகம், புதுச்சேரி திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைவர் சேகர்ரெட்டி உடன் இருந்தார்.
