டெல்லி: 215 கி.மீ.க்கு மேல் பயணிப்போருக்கு ரயில் கட்டணம் உயர்வு இன்று அமலுக்கு வருகிறது. 215 கி.மீ. வரை பயணிப்பவர்களுக்கு ரயில் கட்டண உயர்வு இல்லை என ரயில்வே விளக்கமளித்துள்ளது. ஒரே ஆண்டில் இரண்டாவது முறையான ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே ஜூலை 1 ஆம் தேதி ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருந்தன.
