×

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மேயர் பிரியா ஏற்பாட்டில் புளியந்தோப்பில் நாளை 1500 குடும்பத்துக்கு பரிசுபொருள்: உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்

 

சென்னை: கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம், திரு.வி.க நகர் தொகுதியில் புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலையில் உள்ள தொன்பாஸ்கோ பாலிடெக்னிக் வளாகத்தில், மேயர் பிரியா ஏற்பாட்டில், நாளை மாலை 4.30 மணியளவில் 1500 குடும்பத்தினருக்கு பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடைபெறுகிறது. அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சா.மு.நாசர், கலாநிதி வீராசாமி எம்பி, துணை அமைப்பு செயலாளர் ப.தாயகம்கவி எம்எல்ஏ, அருட்தந்தை ஜாய்குரியன் முன்னிலை வகிக்கின்றனர்.

விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 1500 குடும்பங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி, அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில் பி.வில்சன் எம்பி, ஸ்ரீ காளிகாம்பாள் கோயில் பிரதம குருக்கள் டி.எஸ்.காளிதாஸ் சிவாச்சாரியார், பிராட்வே மெர்ச்சன்ட்ஸ் வெல்பர் அசோசியேஷன் மற்றும் போரா முஸ்லிம் அசோசியேஷன் தலைவரான ஒய்.ஜே.பாகீர் பாய், சென்னை லயோலா கல்லூரி அதிபர் அந்தோணி ராபின்சன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, சென்னை லூர்து பெண்கள் பள்ளி தலைமையாசிரியர் அமலா ரஜினி, எம்எல்ஏக்கள் ஜோசப் சாமுவேல், அ.வெற்றி அழகன், இ.பரந்தாமன், முன்னாள் எம்எல்ஏ ப.ரங்கநாதன், கே.எஸ்.ரவிச்சந்திரன், செ.தமிழ்வேந்தன், எம்.சாமிக்கண்ணு, பெரம்பூர் ராஜன், புனிதவதி எத்திராசன்,

பி.கே.மூர்த்தி, சி.மகேஷ்குமார், கே.சந்துரு, தமிழன் பிரசன்னா, மண்டல குழு தலைவர்கள் சரிதா மகேஷ்குமார், ப.ஸ்ரீராமுலு, கூ.பீ.ஜெயின், என்பிஎம்.ஷேக் அப்துல்லா, பரிதிஇளம்சுருதி, ஆர்.வரதன், இசட்.ஆசாத், பி.உதயசங்கர், பி.ஜெ.துளசிங்கம், இரா.வீரமணி, நா.துலுக்காணம், எம்.பெரோஸ்கான், கா.ராஜ்முகமது, மு.சரவணன், ரமணி லோகேஷ், தமிழ்செல்வி சசிகுமார், எம்.இசட்.அபாய், எம்.ஏ.டீக்கா, பரிமளா சுரேஷ்பாபு, எம் ருத்ரமூர்த்தி, எஸ் புஷ்பராஜ், ஜி.கிருஷ்ணகுமார், எஸ்.சசிகுமார், பா.பி.தாஸ், டி.சுரேஷ்குமார் (எ) பொல்லு சுரேஷ், எம்.தமிம், எஸ்.வெங்கடேசன், வி.க.வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

Tags : Christmas ,Mayor Priya ,Pulianthop ,Udayanidhi Stalin ,Chennai ,Christmas Ceremony ,Eastern District of ,Tonbasco Polytechnic Complex ,Decastar Road ,Pulianthopu, Gannagar Block ,Mayor ,Priya ,
× RELATED திருநெல்வேலியில் பொருநை...