டெல்லி: நாட்டுக்காக பாடுபட்ட காந்தி உள்ளிட்ட தலைவர்களை ஒன்றிய பாஜக அரசு மதிப்பதில்லை என திருச்சி சிவா தெரிவித்துள்ளார். கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுகிறது. மக்களுக்கு எதிரான மசோதாக்களை ஒன்றிய அரசு அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது. மாநிலங்களை தொடர்ந்து பலவீனப்படுத்தும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபடுகிறது என்றும் கூறினார்.
