×

அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம் 2 மடங்கு அதிகரிப்பு!!

வாஷிங்டன்: கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பாண்டு அதிகளவிலான இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 18,822இந்தியர்கள், அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி 2023ஆம் ஆண்டில் 617 இந்தியர்களும், 2024ல் 1,368 இந்தியர்களும் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 2025 ஜனவரி முதல் நவம்பர் 28 வரை 3,258 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20ஆம் தேதி டிரம்ப் பொறுப்பேற்றார்.

அதன் பிறகு அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியர்கள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள், விசா காலத்தை கடந்து தங்கியவர்கள், உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிவிதிப்பு தொடங்கி H1B விசா கட்டுப்பாடுகள் சட்டவிரோத குடியேறிகள் என டிரம்ப்பின் அடுத்தடுத்து நடவடிக்கைகள் இந்தியாவை நேரடியாக பாதிக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில் இதனை ஒன்றிய அரசை எவ்வாறு கையாளப்போகிறது என்று கேள்வி எழுந்துள்ளது.

Tags : Indians ,USA ,Washington ,United States ,EU government ,
× RELATED ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச்...