நாமக்கல் டிச.19: மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு நாமக்கல் ரங்கநாதர் கோயிலில் திருப்பாவை பாராயணம் நிகழ்ச்சி நடந்தது. மார்கழி மாதத்தின் முதல் நாளில் நாமக்கல் ரங்கநாதர் கோயில் அடிவாரத்திலும், நரசிம்மர், நாமகிரி தாயார் சந்நிதியிலும் திருப்பாவை பாராயணம் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். ரங்கநாதர் கோயில் படிவாசலில் உள்ள வீரஆஞ்சனேயர் கோயில் முன் பக்தர்களுக்கு புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்து சமயப் பேரவை சார்பில் 55ம் ஆண்டாக கோயில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், இந்து சமய பேரவைத் தலைவர் பாண்டியன், செயலாளர் சண்முகம், பொருளாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
