×

134 மூட்டை பருத்தி ரூ.3.20 லட்சத்திற்கு ஏலம்

மல்லசமுத்திரம், டிச. 18: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், மல்லசமுத்திரம் கிளையில், வாரம்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடப்பது வழக்கம். நேற்று நடந்த ஏலத்தில் கருமனூர், பாலமேடு, மாமுண்டி, ஆத்துமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 134 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதனை ஏலம் எடுக்க ஈரோடு, சேலம், கோவை, அவினாசி பகுதியை சேர்ந்த வியபாரிகள் கலந்து கொண்டனர். இதில் பி.டி.ரகம் குவிண்டால் ரூ.6099 முதல் ரூ.7920 வரையிலும், கொட்டு பருத்தி ரூ.4055 முதல் ரூ.5055 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 134 மூட்டை பருத்தி ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்து 570க்கு ஏலம் போனது. அடுத்த ஏலம் வரும் 24ம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Mallasamuthiram ,Thiruchengode Agricultural Producers Cooperative Marketing Association ,Karumanur ,Palamedu ,Mamundi ,Aathumedu ,
× RELATED 377 தெருநாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன்