×

ரூ.49.70 இலட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டடம் கட்டும் பணியினை இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு!

 

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே. சேகர்பாபு நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் ரூ.49.70 இலட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டடம் கட்டும் பணியினை இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று (15.12.2025) பெருநகர சென்னை மாநகராட்சி, வி.க.நகர் மண்டலம், வார்டு-78, நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் 78ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.49.70 இலட்சம் மதிப்பீட்டில் 750 சதுர அடி பரப்பளவில் பல்நோக்கு மையக் கட்டடம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது, மேயர் திருமதி ஆர்.பிரியா மண்டலக் குழுத் தலைவர் திருமதி சரிதா மகேஷ்குமார், நியமன குழு உறுப்பினர் சொ.வேலு, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி ராஜேஸ்வரி ஸ்ரீதர், திருமதி சுமதி, திருமதி புனிதவதி எத்திராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Minister ,B. K. Sekarpapu ,Chennai ,Hindu ,Religious Affairs ,Chennai Metropolitan Development Group ,B. K. SEKARBABU NARASINGHE ,PERUMAL GOVIL STREET ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...