கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் இருந்து இதுவரை பாலியல் புகார் தொடர்பாக எழுத்துப்பூர்வ புகார் வரவில்லை: கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் பேட்டி

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் இருந்து இதுவரை பாலியல் புகார் தொடர்பாக எழுத்துப்பூர்வ புகார் வரவில்லை என கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவ-மாணவிகள் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து போலீஸ், கல்லூரி நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். இதனையடுத்து கலாஷேத்ரா நிர்வாகம் வரும் 6ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா; கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் இருந்து இதுவரை பாலியல் புகார் தொடர்பாக எழுத்துப்பூர்வ புகார் வரவில்லை. புகார் வந்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவிகள் கூறியுள்ளனர். கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என நினைத்து மாணவிகள் காத்திருக்கிறார்கள். பாதுகாப்புக்காக கலாஷேத்ரா கல்லூரி முன் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கலாஷேத்ரா கால்லூரியில் பாலியல் துன்புறுத்தல் விவாகாரம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

Related Stories: