தருமபுரியில் கல்லூரி மாணவியை கேலி செய்த இளைஞர்கள்: காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கம்மாளம்பட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகள் சரண்யா. சேலம் அரசு சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது குடிபோதையில் நின்றுகொண்டிருந்த 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கேலி செய்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த மாணவி தட்டி கேட்ட போது அந்த இளைஞர்கள் அவரை தாக்கியதாக தெரிகிறது.

தகவல் அறிந்து வந்த மாணவியின் தாயார் மற்றும் உறவினர்களையும் அவர்கள் தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இரு கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய போது அவர்கள் முன்னிலையிலேயே உள்ளூர் இளைஞர்கள் அடித்து விரட்டியுள்ளனர். இதையடுத்து பாதிக்கபட்ட கம்மாளம்பட்டி கிராமமக்கள் அரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: