மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா ஏப். 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 2ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், மே 5ம் தேதி அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா, ஏப். 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் வலம் வருவர். விழாவில் ஏப். 30ம் தேதி முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அன்று மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மே 1ம் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்.23ல் துவக்கம்: மே 5ல் அழகர் வைகையில் இறங்கும் வைபவம்
