சென்னை கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ மாணவிகள் போராட்டம்

சென்னை: அடையாறு கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் அடையாறு கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் மாணவிகள் குற்றசாட்டுகளை எழுப்பினர்.

இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் இது தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அடையாறு கலாஷேத்ராவை சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவி என கூறப்படும் ஒரு பெண், தனது பெயரை தவறாக பயன்படுத்தி இதுபோன்று பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர் எனவும் இதுபோன்று தூவும் நடக்கவில்லை எனவும் அந்த பெண் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவின் அடிப்படையில் அங்கு பாலியல் தொந்தரவு யாருக்கும் நடக்கவில்லை அடையாறு கலாஷேத்ராவை பெண் தெரிவித்த காரணத்தினால் தேசிய மகளிர் ஆணையம், விசாரிக்குமாறு அளிக்கப்பட்ட உத்தரவை வாபஸ் பெறப்பட்டது. ஆனால் நேற்று ரகசியமாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, அடையாறு கலாஷேத்ராவில் 3 மணி நேரமாக விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள் தொடர்ந்து புகாரளித்தும், சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டும், விசாரணை நடத்த வேண்டிய தேசிய மகளிர் ஆணையம் திடீரென வாபஸ் பெற்றது மாணவிகளிடையே பெரும் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. அடையாறு கலாஷேத்ரா நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதபட்சத்திலும், தேசிய மகளிர் ஆணையம் தரப்பிலும் முறையான விசாரணை மேற்கொள்ளாதபட்சத்திலும் அடையாறு கலாஷேத்ராவில் பயிலும் அனைத்து மாணவர்களும் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேராசிரியர் மீது முறையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் உறுதியான பதிலளிக்காத நிலையில் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: