தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சிங்கோனா டுபைதிரி எஸ்டேட்டில் வனத்தை விட்டு நேற்று அதிகாலை வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் புகுந்து அட்டகாசம் செய்தது.அப்பகுதியில், கருப்பாயி என்பவர் வீட்டை இடித்து கட்டில், மெத்தை, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சூறையாடி உணவு தேடியது.

வீட்டில் இருந்தவர்கள் பின்புறமாக வெளியேறி அக்கம் பக்கத்தினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.இந்நிலையில், வால்பாறை அடுத்த பாரளை எஸ்டேட்டில் ரேஷன் கடை சுவற்றை ஒற்றை காட்டு யானை இடித்து சூறையாடி சென்றது. தொடர்ந்து நீடித்துவரும் யானை பிரச்னையால் வால்பாறையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: