தமிழக வேளாண்மையை நவீனப்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

சென்னை: தமிழக வேளாண்மையை நவீனப்படுத்துவது குறித்து ஆஸ்திரேலியா அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். ஆஸ்திரேலியா நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் உள்ள இன்னவேஷன் மையத்தில் குறைந்து வரும் வேளாண்மை தொழிலாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தமிழக வேளாண்மையை ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் நவீனப்படுத்துதல் குறித்தும், குறைந்த செலவில் பசுமைக்குடில்களை அமைக்க ஆஸ்திரேலியாவின் உயரிய தொழில்நுட்பங்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அமைச்சர் ஆலோசித்தார்.

தமிழகத்தில் நீர் ஆதாரங்களை உழவர்களின் பங்களிப்புடன் மேம்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை ஆஸ்திரேலியா – இந்தியா நீர் ஆராய்ச்சி மையத்தின் மூலமாக முன்னெடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கலந்துரையாடலின்போது தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலர் அபூர்வா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் கீதா லட்சுமி மற்றும் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழக அதிகாரிகள் டான் ரைட், இயன் ஆண்டர்சன் மற்றும் நிஷா ராகேஷ் உடன் இருந்தனர்.

The post தமிழக வேளாண்மையை நவீனப்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: