அதிக விளைச்சல், வெளிமாநில வரத்து அதிகரிப்பால் கேரட் விலை கடும் வீழ்ச்சி-கொடைக்கானல் விவசாயிகள் கவலை

கொடைக்கானல் : கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மலை காய்கறிகளான கேரட், பீன்ஸ், அவரை, முட்டைக்கோஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் வௌிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் அதிகளவில் பயிரிடப்பட்டிருந்த கேரட் நன்கு விளைச்சல் கண்டு, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

அதிக விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ கேரட் ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனையாகி வருவதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘உள்ளூரில் அதிக விளைச்சல் மற்றும் வெளிமாநில வரத்து அதிகரிப்பால் கேரட் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை கூட அடைக்கவில்லை. மேலும் விலை வீழ்ச்சியால் கேரட்டுகளை அறுவடை செய்யாமல் நிலங்களிலே விட்டு விட்டோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: