செருப்பு குடோனில் பயங்கர தீ: ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

காரைக்குடி: காரைக்குடியில் இன்று காலை செருப்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான செருப்புகள் எரிந்து நாசமடைந்தன. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மகர்நோன்பு அக்ரஹாரம் பகுதியில் டில்லா முகமது என்பவருக்கு சொந்தமான செருப்பு கடை குடோன் உள்ளது. இந்த குடோனில் இருந்து இன்று காலை 8 மணியளவில் திடீரென கரும்புகை வெளியேறியது. இதனைத்தொடர்ந்து குடோனில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதிமக்கள், காரைக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான செருப்புகள் எரிந்து நாசமடைந்தன. விபத்து குறித்து காரைக்குடி தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: